Latest News
    Post views-

    முதலமைச்சரின்_வாழ்வாதார_உதவிகள்_வழங்கும்_மாபெரும்_நிகழ்வு_நாளை

    கௌரவ கிழக்குமாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் அல்ஹாபிழ் நசீர் அஹமட் அவர்களின் முயற்சியினால் பல நூற்றுகணக்கான வாழ்வாதார உதவிகளை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளன. இதில்.....
    1 - எமது பிரதேச பள்ளிவாயல்களில் கடமையாற்றும் கத்தீப் மற்றும் முஅத்தின் மார்களுக்கான துவிச்சக்கர வண்டிகளும்,
    2 - சுமைதூக்கும் தொழிலாளிகளுக்கான துவிச்சகர வண்டிகளும்,
    3 - பெற்றுக்கொள்ளத் தகுதியான ஏழ்மை நிலையிலுள்ள மற்றும் சமுர்த்தி பயன்பெறும் 100 குடும்பங்களுக்கான இலவச குடிநீர் இணைப்புக்களும்,
    4 - தெரிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும்,
    5 - பொதுச் சந்தைகளில் மீன் வியாபாரம் செய்யும் 50 வியாபாரிகளுக்கான நவீன தராசுகளும்,
    வழங்கிவைக்கப்படவுள்ளன.
    இந்நிகழ்வு நாளை 10.11.2016 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஏறாவூர் மட்/மம/அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதில் கௌரவ முதலமைச்சர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவற்றினை வழங்கிவைப்பார். அத்தோடு எமது ஊரின் பொது நிறுவனங்களின் தலைவர்களும், ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள். எனவே இந்நிகழ்வுக்கு நலன்விரும்பும் நல்லுள்ளங்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கின்றோம்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்