கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 12 பேரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 12 பேரும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கை யாழ். மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக கடந்த வழக்குத் தவணையின்போது நீதவான் தெரிவித்திருந்தார்.