Latest News
    Post views-

    ஜனாதிபதிக்கு தலைவர் றிஸாட் பதியுதீன் இலஞ்சமாக பணம்கொடுத்துத்தான் இந்த அமைச்சைப் பெற்றாரா ? பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ். அமீர் அலி

    ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை பெற்றுக்கொண்டார் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்த கருத்துக்கெதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி செல்லவுள்ளதா அக்கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

    இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலிதொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.

    இந்த குற்றச்சாட்டை அம்பாரை மாவட்டத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றின் போதுதெரிவித்துள்ளார் அதன் போது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்அமைச்சருமான றவுப் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்னர்கள்அந்த மேடையில் இருந்துள்ளனர்.

    இவ்வாரான ஒரு குற்றச்சாட்டை பிரதி அமைச்சர் சுமத்தியிருப்பது நாங்களும் ஒரு கட்சி என்றஅடிப்படையில் அதன் உண்மை நிலையை அறிய வேண்டிய தேவைப்பாடு இருக்கின் காரணத்தினால் நாங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடத்தில் இந்த இந்த முறைப்பாட்டைச் செய்து உண்மையிலயே எங்களுடைய கட்சியின் தலைவர் றிஸாட் பதியுதீன் இலஞ்சமாக பணம்கொடுத்துத்தான் இந்த அமைச்சைப் பெற்றாரா ?என்கிற விடயத்தை அறிய வேண்டியுள்ளது.

    அது மாத்திரம் அல்லாமல் அம்பாறை மாட்டத்தில் சில இளைஞர;கள் எங்களிடத்தில் முறைப்பாடுசெய்திருக்கின்றார்கள் சுகாதார அமைச்சின் கீழ் தொழில் வழங்குவதாக சுகாதார பிரதி அமைச்சர்பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக ஆதர்வ புர்வமாக தகவல்கள் கிடைத்துள்ளன இந்த விடயம்தொடர்பாக பாராளுமன்றத்திலே ஒரு நாள் தனிநபர் பிரேரனை கொண்வந்து இதனுடைய சகலவிடயங்களையும் நாங்கள் பேச இருக்கின்றோம் 

    இவ் விடயங்கள் தொடர்பாக நல்லாட்சி நடந்து கொண்டிருக்கின்ற இக் கால கட்டத்திலேஉண்மைத் தன்மையை எல்லோரும் அறிய வேண்டும் என்பது எங்களுடைய கட்சியின்எதிர்பார்ப்பாகும் என்றும். தெரிவித்தார்.

    படம் - எம்.ரீ.எம்.பாரிஸ்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்