ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்களைத் தயாரித்தமை மற்றும் இனங்களுக்கிடையே வேற்றுமையை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
திஸ்ஸ அத்தநாயக்கவை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன பிறப்பித்துள்ளார்.