பிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் புதியதோர் தோற்றைத்தக் குறிக்கும் வகையில் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பங்கேற்கவுள்ளார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை 06.50 அளவில் இலங்கையில் இருந்து அவர் இந்தியா புறப்பட்டுச் சென்றார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
இதேவேளை இந்த விஜயத்தின் போது மைத்திரிபால சிறிசேன பிற நாடுகள் சிலவற்றின் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
இதன்படி இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் அவர் அதன் பின்னர் நேபாளப் பிரதமர் மற்றும் பூட்டான் பிரதமருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
இதனையடுத்து மியன்மார் இராஜாங்க அமைச்சருடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடுவார் எனத் தெரியவந்துள்ளது.