Latest News
    Post views-

    ஜனாதிபதியினால் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடம் திறக்க ஏற்பாடு - அமைச்சர் நஸீர்

    சப்னி அஹமட்  

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூலமாக ஜெய்கா திட்டத்தின் கீழ் 514 மில்லியன் ரூபாய் செலவில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தினை திறந்து வைப்பதற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை புதிய கட்டடத்தினை திறந்து வைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்குரிய நேரத்தினை மாகாண ஆளுநர் ஏற்படுத்தி தந்திருக்கின்றார் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்

    களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு நேற்று இரவு (13) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு இடம்பெறுகின்ற செயற்பாடுகளையும்எதிர்வரும் சில நாட்களில் ஜனாதிபதி அவர்களினால் திறக்கப்படவுள்ள செயற்பாடுகள் பற்றியும் அமைச்சர் வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவுடனும்வைத்திய அதிகாரிகளுடனும் கலந்துரையாடினர். இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் 

    களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவின் விசேட அழைப்பின் பேரில் வருகை தந்த மாகாண சுகாதார அமைச்சர் 514 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தினை பார்வையிட்டார். மேலும் வைத்தியசாலையினுடைய குறைபாடுகள்ஆளணிப்பற்றாக்குறை ஆகியவற்றைக் கேட்டறிந்துபுதிய கட்டடத் திறப்பு விழாவிற்கு கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதிசுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் மூலமாக இவ் வைத்தியசாலைக்கு தேவையான மேலதிக வளங்களைப் பெற்றுத்தருவதாகவும் கூறியிருந்தார். அம்பாறை மற்றும் மட்டக்களப்பிலுள்ள மக்கள் இவ் வைத்தியசாலை மூலம் மேலும் நன்மை அடைவார்கள் என குறிப்பிட்ட அமைச்சர்விரைவில் இவ் வைத்திய சாலைக்கு புதிய வைத்திய நிபுணர்கள்மருந்தாளர்கள்ஆய்வுடகூட தொழிநுட்பவியலாளரகள் நியமிக்கப்பட்டு விரைவில் மாகாண பொது வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

    இவ் விசேட சந்திப்பில் வைத்தியசாலையினுடைய வைத்தியட்சகர் டாக்டர்.கு.சுகுன்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை களுவாஞ்சிகுடி நகரின் தலைவர் அ.கந்தவேல் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்