Latest News
    Post views-

    பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் அழைப்பு

    பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
    இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் அனைவரையும் பிரதமர் சந்திக்கவுள்ளார்.
    பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் பிரதமர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
    அலரி மாளிகையில் இந்த வாரம் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
    பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக பதவி ஏற்றுக்கொண்டு நான்கு மாதங்களில் பொலிஸ் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
    பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குறித்த காலப்பகுதியில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து நேரடியாகவே கேள்வி எழுப்பத் தீர்மானித்துள்ளார்.
    இழக்கப்பட்டுள்ள நம்பிக்கையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
    இந்த சந்திப்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவும் இணைந்து கொள்ளவுள்ளார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்