-எம்.என் அமீன்
பல் இன மக்கள் வாழும் சிங்கப்பூரின் தேசிய ஐக்கியத்துக்கு முன்மாதிரி என்ற தலைப்பில் பகிரங்க சொற்பொழிவு ஒன்று எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பில் நடை பெறவுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வந்துள்ள சிங்கப்பூரின் “புதிய நிலா”
சர்வதேச சஞ்சிகையின் ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான அல் -ஹாஜ் செய்யத் ஜஹாங்கீர் உரையாற்றுவார்.
இந்நிகழ்வு மருதானை மாளிகாகந்த வீதியிலுள்ள
149ஆம் இலக்க அஷ்-ஷபாப் கேட்போர் கூடத்தில்
8ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு, அதன் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறும்.
இதில் எவரும் கலந்து கொள்ளலாம் என அமைப்பின் பதில் பொதுச் செயலாளர் சாதிக் சிஹான் தெரிவித்தார்.