ஓட்டமாவடி
அஹமட் இர்ஷாட்
கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள அணைத்து வீதி அபிவிருத்தி திணைக்களதிற்கு சொந்தமான வீதிகள் ஐ திட்டத்தின் கீழ் கௌரவ கிழக்கு மாகாண முதல் அமைச்சர் கௌரவ நசீர் அஹ்மத் கிழக்கு மாகாண வீதி அமைச்சர் கௌரவ ஆரியவதி கலப்பதி மற்றும் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் ஆகியோரின் பற்றுதலுடன் தெரிவு செய்யப்பட்டு நடை முறை படுத்தபடுகிறது.
கிழக்கு மாகாண முழுவதுமாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களதிற்கு கி.மீ. 200 கார்பெட் வீதியும் உள்ளூராட்சிசபைகளுக்கு 400 கி மீ வீதியும் பகிர்ந்தளிக்க பட்டுள்ளது.
இவற்றில் திருகோணமலை மாவட்டத்திற்கான வீதிகள் தெரிவின் போது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களதிற்கு 60 கி.மீ வீதியும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு 100 கி.மீ வீதியும் தமிழ் பிரதேசங்கள் சார்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜனார்த்தனன் நாகேஸ்வரன் முஸ்லிம் பிரதேசங்கள் சார்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் மற்றும்ஜே.எம்.லாகிர் சிங்கள பிரதேசங்கள் சார்பாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி உட்பட பலரும் கலந்துகொண்டு திருகோணமலை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலகங்களிலுள்ள வீதி அபிவிருத்தி திணைக்களதிற்கு சொந்தமான வீதிகள் மற்றும் கிழக்கு மாகாண 13 உள்ளூராட்சி சபைகளுக்கு சொந்தமான பல வீதிகள் தெரிவு செய்யபட்டு அமுல்படுத்தப்படுகிறது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்