Latest News
    Post views-

    கோழி இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு சிரமங்கள் ஏற்படுவதனால் எதிர்ப்பு தெரிவித்து அட்டன் நகரில் கடையடைப்பு போராட்டம்

    மக்கள் பாவனைக்கான அத்தியவசிய பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைத்துள்ளதுஇந்த நிலையில் கோழி இறைச்சிக்கான விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கோழி இறைச்சி கிலோ ஒன்றுக்கான விலை 495 ரூபாவாக நிர்ணயக்கப்பட்டுள்ளதுஇந்த விலையின் அடிப்படையில் கோழி இறைச்சியின் வியாபாரத்தினை முன்னெடுக்க முடியாத நிலையில் கோழி இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு சிரமங்கள் ஏற்படுவதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டன் நகரில் 18.07.2016 அன்று கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

    இதில் அட்டன், டிக்கோயா, பொகவந்தலாவ, நோர்வ+ட், டயகம, மஸ்கெலியா, கொட்டகலை, தலவாக்கலை ஆகிய பிரதான நகரங்களில் கோழி கடை உரிமையாளர்கள் ஒன்றினைந்து இந்த கடையடைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து அரசாங்கத்தின் வனத்திற்கு இவ்விடயம் தொடர்பாக கொண்டு வருவதற்காக அட்டன் சக்தி மண்டபத்தில் கடை உரிமையாளர்கள் ஒன்றுகூடி அட்டன் பொலிஸாருக்கு மணு ஒன்றை கையளித்துள்ளதுடன் வ்விடயம் தொடர்பில் ஊடகங்களின் கவனத்திற்கும் இதன்போது கொண்டு வந்துள்ளமை குறிப்பிடதக்கது.

    எனவே இவ்வாறான நிலையில் தற்பொழுது விற்பனை செய்யப்படும் 580 ரூபாவிலிருந்து குறைவான விலைக்கு கோழி இறைச்சியை விற்பனை செய்ய முடியாத நிலையில் கோழிகளுக்கான மருந்து மற்றும் தீண் ஆகியவற்றில் வட் வரி அதிகரித்துள்ளமையினால் விலை மாற்றம் செய்ய முடியாது என இவ் கோழி கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    (க.கிஷாந்தன்)


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்