Latest News
    Post views-

    காத்தான்குடி வாவிக்கரை வீதி கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் புனரமைப்பு.

    மட்டக்களப்பு மாவட்டத்தின், காத்தான்குடி பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள வாவிக்கரை வீதியினை புனரமைப்பு செய்வதற்காக கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் அவ்வீதி உள்வாங்கப்பட்டு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேட்கொள்ளபட்டு வருகின்றன. இவ்வீதியானது பல வருட காலமாக புனரமைக்கப்படாமல் இருப்பதனால் மழை காலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதன் காரணமாக அப்பகுதி மக்களும் அவ்வீதியினை பயன்படுத்துகின்றவர்களும் இப்பகுதியில் ஆற்றங்கரை மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களும் பல்வேறு இடர்களுக்கும், அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர்.

    இவ்வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் பொது மக்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து மக்கள் பங்களிப்புடன் இவ்வீதியினை புனரமைக்க கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் இவ்வீதியானது உள்வாங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் அமல்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மோற்கொள்ளப்பட்டு வருவதோடு, இத்திட்டத்திற்காக பத்து லட்சம் ரூபாய் நிதியொதிக்கீடு செய்யப்பட்டு கொங்ரீட் வீதி இடப்பட இருக்கின்றது.

    இவ்வீதியானது சிறந்த முறையில் நீர் தேங்கி நிற்காமல் வடிந்தோடக்கூடிய முறையிலும் சிறந்த தரமுள்ள கொங்ரீட் கலவைகள் இடப்பட்டு இவ்வீதி அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் காத்தான்குடி நகரசபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுடன் உரிய இடத்திற்கு களவிஜயமொன்றினை மேற்கொண்டார்.

    இதன் போது இவ்வீதியினுடைய நிலைமைகளை எடுத்துரைத்து, அதற்கான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வழங்கினார்.

    M.T. ஹைதர் அலி





  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்