முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,ஆட்சியில் இருந்தபோது அவருக்கு பிடிக்காத நான்கு பெண்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று தமது ஆய்வுக்கட்டுரையில் இதனை தெரிவித்துள்ளது.
இதில் முதலாமவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இரண்டாமவர் ஐக்கிய நாடுகளின் அமெரிக்காவுக்கான வதிவிடப்பிரதிநிதி சமந்தா பவர், மூன்றாமவர் ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, நான்காமவர் இலங்கைக்கான முன்னாள் அமெரக்க தூதுவர் மிச்செய்ல் ஜே சிசன் ஆகியோராவர். இதில் மஹிந்தவுக்கு மிகவும் பிரச்சினையை தரக்கூடியவராக சமந்தா பவர் கருதப்பட்டார்.
மஹிந்த தமது ஆட்சிக்காலத்தில் அமைச்சரவை அங்கத்தவர்களை சந்திக்கும்போதெல்லாம், அந்த வெள்ளை மாளிகையின் ஒல்லியான(மெலிந்த) பெண்ணே தமக்கு பிரச்சினையை ஏற்படுத்துவதாக குறிப்பிடுவார் என்று ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை சமந்தா பவருக்கும், அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டனுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்த மஹிந்த ராஜபக்ச, அதிகளவான பணத்தையும் செலவிட்டார்.
2008ஆம் ஆண்டு பாரக் ஒபாமாவின் தேர்தல் பிரசாரங்களின் போது மஹிந்தவுக்கான ஆலோசனைகளை தமது வெளிநாட்டு ஆலோசகர்களுக்கு வழங்கியிருந்தார். எனினும் மஹிந்த எதிர்ப்பார்த்தப்படி ஹிலாரிக்கும் சமந்தா பவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்படவில்லை.
இதன்பின்னர் மஹிந்த, ஹிலாரியின் பின்னர் ராஜாங்க செயலாளராக வந்த ஜோன் கெரிக்கு குறிவைத்தார். எனினும் அவர், சீனாவுடன் இலங்கை நெருங்கி செல்லுமானால், அந்த நாட்டுக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் என்று செனட்சபையில் வைத்து தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் சமந்தா பவருடன் ஒப்பிடுகையில், ஜோன் கெரி அதிகாரமுள்ளவர் என்பதை உணர்ந்தார். எனினும் சமந்தா பவர் இலங்கை தொடர்பான தமது இறுக்கமான நிலைப்பாட்டை தளர்த்தவில்லை.
இதேவேளை, முன்னாள் இலங்கை தூதுவர் மிச்செயல் ஜே சிசன், சமந்தா பவரின் ஆலோசனையின் பேரிலேயே கோட்டே நகாவிஹாரைக்கு சென்று மாதுலுவாவே சோபித தேரரை சந்தித்தார்.
இதனைக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாட்டை சோபித தேரரைக்கொண்டு தோற்றுவித்தார்.
அத்துடன் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போது சுகாதார அமைச்சராக இருந்தவேளையில் அவரை ஹவாட் பல்கலைக்கழக கௌரவிப்புக்கு உட்படுத்தினார்.
எனவே இதனை மையமாகக்கொண்டே மிச்செய்ல் ஜே சிசன் இலங்கையில் இருந்து செல்லும் போது, சமந்தா பவரின் இரண்டாம் நிலை தளபதி இலங்கையில் இருந்து செல்வதாக மஹிந்த தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்திருந்தார்.
மிச்செய்ல் சிசன் தற்போது ஐக்கிய நாடுகளின் அமெரிக்காவுக்கான பிரதி தூதுவராக பணியாற்றுகிறார்.
இதேவேளை அதிகாரம் மிக்க சமந்தா பவர் தற்போது இலங்கைக்கு வந்துசென்றபோது மஹிந்த ராஜபக்ச, அவரின் அதிகாரம் மிக்க செயற்பாடுகளை சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பார்க்கவேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டார் என்றும் ஆங்கில ஊடகம் கருத்துக்கூறியுள்ளது. (Lanka Sri)