முஹம்மது அஸீம்
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையால் தெற்குப் பிரதேசத்தில் வாழும் நமது சகோதர சகோதரிகள் உயிர், உடமைகளை இழந்து நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
நாம் கடந்த காலங்களில் சுனாமி போன்ற பாரிய அனர்த்தங்களில் சிக்குண்ட போது, மக்காக உதவி செயதவர்கள். இன்று அவர்கள் எதிர்நோக்கியுள்ள இந்நிலையில் நாம் என்ன செய்யபோகிறோம்? வீட்டுக்குள்ளிருந்து கொண்டு தொலைக்காட்சிகளில் அந்த மக்களின் நிலையைப் பார்த்து பரிதாபப்பட்டால் மட்டும் போதுமா? வாருங்கள் மட்டு மாவட்ட இளைஞர்களே!
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் நாளை 01.06.2017 ம் திகதி மட்டக்களப்பு மாநகரில் நிவாரணப்பொருட்கள் சேமிப்புப் பணியை மேற்கொள்ளவுள்ளது. நீங்களும் இணைந்து துயரத்தில் துடித்துக்கொண்டிருக்கும் அந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். நிச்சயம் இறைவன் இவ்வாறான பேரழிவுகளிலிருந்து நம்மை காப்பான்.
மட்டு.மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம்