Post views-

தங்கச் சங்கிலியை பட்டப்பகலில் பறித்துச் சென்ற நபர் ஒருவரை பொலிஸார் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.

கல்முனையில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை பட்டப்பகலில் பறித்துச் சென்ற நபர் ஒருவரை பொலிஸார் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.
கல்முனை, சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியே நேற்று இவ்வாறு பறித்துச் செல்லப்பட்டுள்ளது.
எனினும் இதை கேள்வியுற்ற பாண்டிருப்பு நடமாடும் பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி சப்இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் அனோஜன் அங்கிருந்த இளைஞர்களுடன் சுமார் 8 கிலோமீற்றர் வரை குறித்த நபரை விரட்டிச்சென்று கோட்டைக் கல்லாற்றில் வைத்து பிடித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நிந்தவூரைச் சேர்ந்தவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் தங்கச் சங்கிலி என்பவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் உட்பட கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீதிபதியின் அனுமதியோடு சந்தேகநபர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்