ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக, தாய்லாந்து நோக்கி பயணித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தலைநகர் பேங்கொக்கை இன்று சென்றடைந்தார்.
தாய்லாந்தின் கலாசார அமைச்சர் Vira Rojpojchanarat தலைமையிலான குழுவினர் மற்றும் தாய்லாந்து அரச பிரதிநிதிகள் ஜனாதிபதியை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
தாய்லாந்தில் அமைந்துள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயமும் ஜனாதிபதியை வரவேற்கும் நிகழ்வொன்றை
ஏற்பாடு செய்திருந்தது.
ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாடு நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை பேங்கொக்கில் நடைபெறவுள்ளது.
மாநாட்டில் ஆசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி 34 நாடுகள் பங்கேற்கவுள்ளன.