Post views-

தொடரும் வரட்சியால் நாட்டில் 3,38,213 பேர் பாதிப்பு: வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்களே அதிகம்

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரட்சியால் நாடு முழுவதும் 3,38,213 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் 20,458 குடும்பங்களைச் சேர்ந்த 69,678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று வடக்கு, ஏறாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16,591 குடும்பங்களைச் சேர்ந்த 57,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
வாய்க்கால்கள், குளங்கள் மற்றும் கிணறுகள் வற்றிப்போய் காட்சியளிக்கின்றன.
அத்துடன், வேளாண்மை நிலங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாதுள்ளமையால், அவை கருகியுள்ளதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
திருகோணமலை மாவட்டத்திற்கு உட்பட்ட கிண்ணியா, மூதூர் உள்ளிட்ட பல கிராம மக்களும் நீர் இன்றி தவிக்கின்றனர்.
சுமார் 3,867 குடும்பங்களைச் சேர்ந்த 12,677 பேர் தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தமக்குத் தேவையான குடிநீரைப் பெற்றுக்கொள்ள நாள்தோறும் பல கிலோ மீற்றர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன், வேளாண்மை நடவடிக்கைகளும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
இதேவேளை, வட மாகாணத்தில் 2454 குடும்பங்களைச் சே்ர்ந்த 8661 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கரச்சி, கண்டாவளை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த 1516 குடும்பங்களைச் சேர்ந்த 5550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளில் 938 குடும்பங்களைச் சேர்ந்த 3111 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை, மாத்தறை மாவட்டங்களிலும் வரட்சியான காலநிலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.(NF)
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்