விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பெண்கள் மூன்று பேர், அநுராதபுரம் பொலிஸ் நிலைய குற்ற ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்ப்பட்டுள்ள பெண்கள் மூவரும் நகரத்தின் பல இடங்களில் விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
44, 45, 53 வயதான பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் மதவாச்சி, பரசன்கஸ்வெவ மற்றும் கண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட 3 பெண்களையும் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.