உலக குடிசன தினம் இன்றாகும்.
இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவையில் இடம்பெற்றது .
‘வீடமைப்பிற்கு முன்னுரிமை’ எனும் தொனிப் பொருளில் இம்முறை குடிசன தினம் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்வுக்கு இணைவாக சுகலா தேவி கம எனும் பெயரிலான மாதிரிக் கிராமத்தினை பொலன்னறுவை நுவரகல பிரதேசத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
24 வீடுகளைக் கொண்டமைந்துள்ள இந்த மாதிரிக் கிராமமானது நீர் , மின்சாரம் உள்ளிட்ட சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள சிறுநீரக நோயாளர்கள் 600 பேரது குடும்பத்தினருக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் வீடமைப்புக் கடன் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு மற்றும் சிறுநீரக நிதியத்திற்கு 10 இலட்சம் ரூபா வழங்கும் நிகழ்வு என்பனவும் இதன் போது இடம்பெற்றன.
1985 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரணசிங்க பிரேமதாஸ ,ஜமேய்க்காவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் குடிசன ஆணைக்குழு கூட்டத்தொடரில் முன்வைத்த ஆலோசணைக்கமையவே உலக குடிசன தினம் பிரகடனப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தககது.