சிலாபம் - வட்டக்கல்லிய பகுதியில் 44 வயதான வர்த்தகர் ஒருவர் அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்று தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கை, கால்கள் மற்றும் முகம் என்பன துணியால் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, உயிரிழந்தவர் இறால் பண்ணை ஒன்றை நடத்தி வந்ததோடு, பணத்தை வட்டிக்கு வழங்கும் தொழிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.