Post views-

ஜப்பானைச் சேர்ந்த செல்லியல் துறை பேராசிரியருக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு

உலகின் உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது, சுவீடன் நாட்டில் உள்ள கரோலின்ஸ்கா ஆய்வு மையம், ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசினை வழங்குகிறது.
அந்த நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் பெயரில் இந்த பரிசு வழங்கப்படுகிறது, இதில் 2016 ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த யோஷிநாரி ஓஷூமிக்கு (Yoshinori Ohsumi) நடப்பு ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியா பல்கலைக்கழகத்தில் செல்லியல் துறை பேராசிரியராக பணியாற்றி வரும் ஓஷூமி, ஆட்டோபாஜி (autophagy) எனப்படும் செல்லியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.
உடல்களின் செல்கள் தம்மைத்தாமே அழித்துக்கொள்வது பற்றிய ஆய்வுக்காக யோஷிநாரி ஓஷூமிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்பட்டது.
அயர்லாந்து நாட்டை சேர்ந்த டாக்டர் வில்லியம் காம்பெல், ஜப்பானை சேர்ந்த டாக்டர் சடோஷி ஒமுரா மற்றும் சீனாவை சேர்ந்த டாக்டர் யூயூ டு ஆகிய 3 பேருக்கும் நோபல் பரிசு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
1905 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த நோபல் பரிசில் மருத்துவத்துறைக்கு வழங்கப்படுவது இது 107 ஆவது முறையாகும்.
இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு நாளையும் (செவ்வாய்க்கிழமை), வேதியியல் துறைக்கான நோபல் பரிசு புதன்கிழமையும், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும் அறிவிக்கப்படவுள்ளது.
பொருளாதாரம் மற்றும் இலக்கியத்துறைக்கான நோபல் பரிசு அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்