Post views-

டிரம்பின் ஆபாசப் பேச்சு - ஹிலாரிக்கு சாதகமாகியது..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் அடிக்கடி அழகி போட்டிகள் மற்றும் மாடலிங் விழாக்களை நடத்தி தனக்கு சொந்தாமன சேனல்களில் வெளியிட்டு வந்துள்ளார்.

அவ்வகையில், கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது, அழகான பெண்களுடன் உறவுவைத்துக் கொள்வது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். 

ஸ்காட்டி நெல் ஹூகேஸ் என்ற அழகியைப்பற்றி தனிப்பட்ட முறையில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் அவர் வெளியிட்ட மிகவும் கீழ்த்தரமான இந்த ஆபாச கருத்தை டிரம்பின் உடையில் அணிந்திருந்த மைக்ரோபோன் வழியாக ஒட்டுகேட்டு, அவரது அதிருப்தியாளர்கள் அப்போது பதிவு செய்து வைத்திருந்தனர்.

ஏற்கனவே, பெண்களைப்பற்றி மிகவும் கீழ்தரமாக விமர்சிக்க கூடியவர் என்ற பட்டப்பெயரை பெற்றுள்ள டிரம்பின் இந்த சர்ச்சைப் பேச்சை உள்ளடக்கிய வீடியோ, அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு தற்போது சாதகமாக அமைந்துள்ளது.

இதைப்போன்ற பெண்ணியத்துக்கு எதிரானவரையா, இந்த நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க போகிறீர்கள்? என கேட்டு டிரம்பை ஹிலாரி பிரசாரம் செய்து வருகிறார். 

இந்நிலையில், அழகான பெண்களுடன் உறவுவைத்துக் கொள்வது தொடர்பாக முன்னர் தெரிவித்த கருத்துக்கு தற்போது டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது. 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்