Latest News
    Post views-

    சர்வதேச சிறுவர் தினம் இன்று

    சர்வதேச சிறுவர் மற்றும் வயோதிபர் தினங்கள் இன்று கொண்டாடப்படுகின்றன.
    “அழகிய சிறுவர் உலகைப் பாதுகாப்பதற்காக முதியோரே கை கொடுங்கள்” என்பதே இம்முறை சர்வதேச சிறுவர் தினத்தின் தொனிப்பொருளாகும்.
    சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய வைபவம் 500 சிறுவர்களின் பங்குபற்றலுடன் கேகாலை புனித ஜோசப் கல்லூரியில் இன்று (01) நடைபெறவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
    தங்களின் பிள்ளைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு இத்தினத்தில் கேட்டுக் கொண்டுள்ளது.
    இதேவேளை, சர்வதேச முதியோர் தினத்தையொட்டி, கொண்டாடப்படும் முதியோர் தினக் கொண்டாட்டம் இன்று கண்டி பொல்கொல்லயில் அமைந்துள்ள தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தின் புதிய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
    “முதியோர் உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய எதிர்காலம்” என்பதே இம்முறை இந்த தினத்தின் கருப்பொருளாகும்.
    நாடு முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளில் முதியோர் தின நிகழ்வுகளுக்காக சுமார் 1000 முதியோர்கள் கலந்துக்கொள்ள உள்ளதுடன், 100 வயதிற்கும் மேல் வாழ்கின்ற முதியோரை கௌரவிப்பதுடன், பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
    இதேவேளை, நாட்டில் வாழ்கின்ற 25 இலட்சத்துக்கும் மேற்பட்ட முதியோர் சனத்தொகை, மேலும் 10 வருடங்களில் இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
    ஆயினும், முதியோர்களை தமது பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும், நாட்டிற்கும், இனத்திற்கும் சுமையாகக் கருதாமல், தேசிய பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்