சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, மிருகக்காட்சி சாலையை இலவசமாக பார்வையிடுவதற்கு இன்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக நிலைபெறுதகு அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தெஹிவளை, பின்னவலை மற்றும் ரிதியகம மிருகக்காட்சி சாலைகளை சிறுவர்கள் இலவசமாக பார்வையிட முடியும் என பதில் அமைச்சர் சுமேதா ஜயசேக தெரிவித்தார்.
இதன் பிரகாரம் 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு மிருகக்காட்சி சாலைகளை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
இதுதவிர காலை 8 மணிமுதல் மாலை 4 மணி வரை சிறுவர் தின நிகழ்ச்சிகள் பலவற்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும், அவற்றில் சிறுவர்கள் பங்குபற்ற முடியும் என்றும் பதில் அமைச்சர் சுமேதா ஜயசேன கூறினார்.