Post views-

மாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கான விசேட குழு நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின், வாகரை, கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் மாங்கேணி தெற்கு 211G, கிராம சேவையாளர் பிரிவிலுள்ள காரமுனை மீள்குடியேற்ற கிராமத்தில் நிலவும் குடியிருப்புக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் கிடைக்காமை தொடர்பாக காரமுனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபையின் தலைவர் கே.எல்.எம். அஸனார் மற்றும் செயலாளர் எஸ். நளீம் ஆகியோர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் தலைமையில் 2016.07.21ஆந்திகதி
 மாகாண காணி ஆணையாளர் அனுர தர்மதாஸ அவர்களை மாகாண சபையில் சந்தித்து குடியிருப்பு காணிகளின் விபரங்களை ஆவணங்களோடு சந்தித்து கலந்துரையாடி தெளிவுபடுத்தினர்.
இதனை கருத்திற்கொண்ட மாகாண காணி ஆணையாளர் வாகரை கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தினால் அக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் காணிகளின் விபரங்களை திரட்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மாகாண சபை உறுப்பினரிடம் தெரிவித்தார். அதற்கமைவாக அக்கிராமத்திற்கு பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தரினால் அக்கிராமத்தில் குடியிருக்கும் மக்களின் காணிகளின் விபரம் திரட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அதன்பயனாக  2016.09.22ஆந்திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வை தொடர்ந்து மாகாண  சபை தவிசாளர் சந்திரதாஸ கலப்பதி அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சர் கெளரவ. ஆரியவதி கலப்பத்தி, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அனுர தர்மதாஸ, அமைப்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்களை உள்ளடக்கியதாக குழுவொன்று அமைக்கப்பட்டதோடு, இக்குழுவானது ஒவ்வொரு மாதமும் தங்களது மாவட்டத்திலுள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி சம்மந்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்