(எம்.எஸ்.எம்.சாஹிர்)
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் அறபுப்பாலை வெளியில் இப்றாஹீம் நபியவர்கள் நிகழ்த்திய
தியாகமும் அதற்கு உறுதுணையாய் நின்று தன் இன்னுயிரைத் துறக்கத் துணிந்த இப்றாஹீம் நபியின்
அருமைப் பாலகராம் இஸ்மாயீல் நபியின் மன ஓர்மையும் நினைவு கூரப்படும் நாளே ஹஜ்ஜுப் பெருநாளாகும்.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளரும் கிழக்கு மாகாண சபை
உறுப்பினருமான கே.எம்.அப்துல் றஸ்ஸாக்(ஜவாத்) விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச்
செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அச் செய்தியில்,
“இலட்சக்கணக்கான ஹாஜிகள் உலக சுகபோகங்களை மறந்து இறை நாட்டத்தை
மட்டுமே மனதிலிருத்தி ஒன்று கூடியுள்ள இவ்வேளையில், நாட்டின் சாந்தி சமாதானத்துக்காகவும்
நல்லிணக்கத்துக்காகவும் நலன் நோக்கத்திற்காகவும் பெருநாள் தொழுகையின் போது நாம் அனைவரும்
ஒன்று கூடி, இந்த நாட்டை, இனபேதமற்ற, தொழில்பேதமற்ற, இலஞ்சம், ஊழல் துஷ்பிரயோகமற்ற நாடாக
மாற்ற நாம் இருகரமேந்தி இறைவனைப் பிரார்த்திப்போம். 
பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த ஈதுல் அழ்ஹா
ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.




