Post views-

வெலிமடை நகரில் பிரதமர் ரணில்..


(க.கிஷாந்தன்)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 27.08.2016 அன்று வெலிமடைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய  அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், வெலிமடையில் நடைபெற்றது.

தொழில், தொழில் உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதற் கட்டமாக விசேட கூட்டமொன்று வெலிமடை நகரில் விடுதி ஒன்றில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெலிமடை நகரில் பேரணி ஒன்றும்  இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் டிஜிடல் அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பல முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடதக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்