கொழும்பு - பம்பலபிட்டி - கொத்தலாவல மாவத்தையில் உள்ள தனது வீட்டின் பிரதான நுழைவாயில் அருகே வைத்து கடத்திச் செல்லப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாவனெல்லயில் ஜனாஸா கண்டெடுக்கப்பட்டுள்ளது இந்த தகவலைஅவரதுகுடும்பத்தினர் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
மொஹமட் சாகீப் சுலைமான் படுகொலை செய்யப்பட்டு அவரது ஜனாஸா தீமூட்டி எரிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஜனாஸா தற்போது மாவனெல்ல பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலிருந்தே, படுகொலை செய்யப்பட்டவரின் தந்தைக்கு 20 மில்லியன் கப்பம் கேட்டு, தெலைபேசி அழைப்பு வந்தமை குறிப்பிடத்தக்கது.




