Post views-

நாட்டு மக்களின் தேவை உணர்ந்து சேவை செய்வதற்கென நல்லதோர் ஜனாதிபதி உருவாகியுள்ளார்

-க.கிஷாந்தன்-

நாட்டின் நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பமாகி ஒரு வருடமாகிவிட்டது. இந்த நல்லாட்சியை உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

அதேவேளை நாட்டு மக்களின் தேவை உணர்ந்து சேவை செய்வதற்கென நல்லதோர் ஜனாதிபதி உருவாகியுள்ளார். கடந்த காலங்களில் ஒரு மாவட்டத்தில் மட்டும் சேவை முன்னெடுப்புகள் இடம்பெற்றது.

இப்பொழுது நாடளாவிய ரீதியில் சேவைகளை முன்னெடுக்க எமக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சீமெந்து பக்கட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 17.08.2016 அன்று நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் அதிகாரிகள், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் நாயகம் சுப்பிரமணியம், உபதலைவர் ஜெயபாரதி, நிர்வாக செயலாளர் கிருஷ்ணன் என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,

நாட்டில் பரந்தளவிலான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள ஊழல் மோசடிகளையும் கண்டறியப்பட்டு ஊழல் அற்ற நாடு ஒன்றுக்கான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றார்.

ஊழல்களில் ஈடுப்பட்டவர்களை இணங்கண்டு சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதேவேளை பெருந்தோட்ட பகுதிகளில் அபிவிருத்திகளை துரிதப்படுத்தும் இலக்கையும் ஜனாதிபதி கொண்டுள்ளார்.

தோட்டப்பகுதிகளில் மக்களின் பாவனைக்குதவாத பிரதான வீதிகள், கல்வி நடவடிக்கைகள், வீடு மற்றும் காணி விடயங்களில் ஒதுக்கப்பட்டுள்ள எமது அபிவிருத்தி பின்னடைவுகளை பூர்த்தி செய்து வருகின்றார்.

இந்த வகையில் மக்களால் பூர்த்தி செய்யப்படாத குடியிருப்பு மற்றும் வீதிகள் ஆகியவற்றை பூரணப்படுத்திக் கொள்வதற்கு சீமெந்து பக்கட்களும் தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்றது. இதன் பயனை மக்கள் அனுபவித்து கொள்ள வேண்டும்.

இவ்வாறாக தேவை உணர்ந்து சேவை செய்யும் இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு நாம் அணைவரும் ஒன்றுக்கூடி மேலும் சக்தியை வலுப்படுத்தி நமது தேவைகளை அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என இதன்போது தெரிவித்தார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்