Post views-

அமைச்சர் ஹக்கீம் தலைமையில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடமாடும் சேவை

-சப்னி அஹமட்-
பொது மக்களின் குடி நீர்ப் பிரச்சினைகளை தீர்க்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடமாடும் சேவையை அம்பாறை நகரில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (18) பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வு இன்று (18) வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக்கிழமையும் அம்பாறை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிழக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் காரியாலயத்தில் நடைபெறும். அம்பாறை மாவட்ட குடியிருப்பாளர்கள் தாம் வாழும் பிரதேச வீதிகளில் பிரதான நீர்க் குழாய்கள் போடப்படாத நிலையில், இதுவரையில் தீர்த்து வைக்கப்படாதுள்ள குடி நீர்ப் பிரச்சினைகள், குடி நீரிணைப்புப் பெற கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் அவ்வீதிகள் சம்பந்தப்பட்ட தகவல்களை அல்லது உங்களின் பிரச்சினைகளை உள்ளடக்கிய முறைப்பாட்டினை எழுத்து மூலம் கொண்டு சென்று அம்பாறை நகரில் இடம்பெறும் இந்நடமாடும் சேவையில் துரிதகதியில் தீர்வினைக் காணலாம் அல்லது அதற்கான அனுமதியினை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நசீர்,   நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்சார், பிரதித் தலைவர் ஷபீக் ரஜாப்தீன், அமைச்சின் உயரதிகாரிகள், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர், யூ.எல்.எம். முபீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்