ஓட்டமாவடி
அஹமட் இர்ஷாட்
கல்குடா
பிரதேசத்தில் கிறிக்கட விளையாட்டினை ஊக்கப்படுத்தும் நோக்குடன் தேசிய, சர்வதேச மட்டங்களை ஒத்த வகையிலே பெரும் தொகை பணம்
செலவிடப்பட்டு ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் கல்குடா பிரீமியர் லீக் (KPL
T20) கிறிக்கட் சுற்று போட்டியினை இவ்வருடமும்
ஐந்தாவது தடவையாக வாழைச்சேனை நியூஸ்டார் விலையாட்டு கழகம் வெற்றிகரமாக நடாத்தி
முடித்துள்ளது.
17.08.2016 அன்று ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம்
பெற்ற இறுதி போட்டியில் றேன்சர்ஸ் விளையாட்டு கழகமும் அல்-இஹ்சான் விளையாட்டு கழகமும் பலப்பரீட்ச்சை நடாத்தியதில் அல்-இஹ்சான் விளையாட்டு கழகம் ஐந்தாவது KPL T20
கிண்ணத்தினை சுவீகரித்து கொண்டது.
குறித்த இறுதி நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதம அதீதியாக கலந்து கொண்டதுடன் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் அஸ்மி, பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜனாப் தெளபீக் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.




