கைதடியைச் சேர்ந்த வாய்பேச முடியாத மற்றும் காது கேளாத 25 வயது நிரம்பிய பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நால்வருக்கு, 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் நட்டஈடு ஆகியவற்றை வழங்குமாறும் இன்று புதன்கிழமை, உத்தரவிட்டார்.
குறித்தப் பெண்ணை, கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி இரவு 7.30 மணியளவில், நால்வர் அடங்கிய கும்பலொன்று, கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




