த.மயூரன்,கல்லடி
மட்டக்களப்பு கல்லடி வேலூர் இராமகிருஸ்ணா சனசமூக நிலையத்தின் அணுசரனையினால் இவ்வருடம் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக மட்டக்களப்பின் சிறந்த விரிவுரையாளரினால் முன்னோடிக் கல்விக் கருத்தரங்கானது 10.08.2016 இன்று காலை 08.30 மணி தொடக்கம் பகல் 01.30 மணி வரை கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் கல்லடி வேலூர், ஸ்ரீ சக்தி வித்தியாலய மாணவர்களும், கல்லடி, விநாயகர் வித்தியாலய மாணவர்களும் கலந்து கொண்டதுடன் இராமகிருஸ்ணா சனசமூக நிலையத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களும் ஸ்ரீ சக்தி வித்தியாலய அதிபர், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.






