Post views-

தொழுகை முடிந்து வெளியேறிய நபர் கால் தவறி 20 அடி பள்ளத்தில் வீழுந்து உயிரிழப்பு

(க.கிஷாந்தன்)


வெலிமடை குருதலாவ பிரதேசவாசி ஒருவர் வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில் கால் தவறி 20 அடி பள்ளத்தில் வீழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று வெலிமடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் வெலிமடை குருதலாவ பிரதேசத்தை சேர்ந்த 42 வயது நிரம்பிய ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருதலாவ ஜீம்மா பள்ளிவாசலில் 09.08.2016 அன்று மாலை தனது வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பற்ற பாதையில் நடந்து செல்லுகையில் கால் தவறி 20 அடி பள்ளத்தில் வீழுந்துள்ளார்.

இதன்போது மேற்படி நபர் அயலவர்களால் மீட்கப்பட்டு தியத்தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இவர் உயிரிழந்திருப்பதாக விசாரணையை மேற்கொண்டு வரும் வெலிமடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி உயிரிழந்த நபர் காத்தான்குடி பிரதேசத்தில் தனியார் வங்கி ஒன்றின் முகாமையாளராக கடமைபுரிந்தவர் எனவும் பொலிஸாரின்  ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்