Post views-

முச்சக்கரவண்டி 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து



(க.கிஷாந்தன்)


நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி - தலவாக்கலை பிரதான வீதியில் தலவாக்கலை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி நாவலப்பிட்டி கல்லோயா பகுதியில் 30  அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

03.08.2016 அன்று புதன்கிழமை காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வாகனத்தில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் படுங்காயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்