(க.கிஷாந்தன்)
ஹப்புத்தளை நகரத்தில் வெற்றிலை வியாபார சிறிய கடை ஒன்றில் இருந்து 20,000 ரூபாய்க்கும் மேல் பெறுமதியான கேரளா கஞ்சா ஹப்புத்தளை பொலிஸாரால் 02.08.2016 அன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
அதேவேளை இக் கேரளா கஞ்சாவினை விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் 43 வயது மதிக்கதக்க வெற்றிலை கடை உரிமையாளர் மற்றும் 23 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரினது பொலிஸ் விசாரணைகளை பதிவு செய்ததன் பின் பண்டாரவளை நீதமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்போவதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




