அல்லாஹ்வின் உதவியால் இபாதத்துக்கள் நிறைந்த புனித ரமழான் மாதம் நிறைவுற்று உலகில் பல நாடுகளில் வாழ்ந்து வரும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நழ்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
முஸ்லிம்கள் அனைவரும் சந்தோசமாக இப்பெருநாளை கொண்டாடும் இந்த சந்தோசத்தை தந்த அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி நம் எல்லோருடைய உடல் ஆரோக்கியத்துக்காகவும், அனைத்து முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவும் எம்மை படைத்த அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக.
நம்நாட்டை பொருத்தவரை அன்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளின் இயற்கை சீற்றத்தினால் இந்த வருட நோன்புப் பெருநாளை மிக சந்தோசமாக கொண்டாட முடியாமலும், உலகில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் இயற்கை அனர்த்தம் மற்றும் உள்நாட்டு யுத்ததினால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின் றார்களோ எம்சகோதர உள்ளங்கள் அனைவருக்காகவும் இத்தருணத்தில் அல்லாஹ்விடம் அனைவரும் கையேந்தி துஆ செய்வோமாக.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக எமது நாட்டின் ஏனைய இனங்கள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த மக்களுடன் மிகவும் ஐக்கியமாக வாழ்ந்து வரும் இத்தருனத்தில் நாட்டில் இன்று நிலவும் அமைதியான சூழ்நிலை சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் உதவும் வகையில் இந்த நிலைமை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
M.T. ஹைதர் அலி




