முக்கியமான 10 அத்தியாவசியப் உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும், வெகு விரைவில் இப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(06) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை செயற்கை முறையில் அதிகரிப்பதற்கு எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்கவும் ஜனாதிபதி தலைமையில் நேற்று(05) கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த குழுவில், ஜனாதிபதி பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இங்கு அரிசி, சமையல் எரிவாயு, சீமெந்து, கடலை, பால்மா, ரின் மீன், பருப்பு உள்ளிட்ட 15 வகையான பொருட்கள் அத்தியாவசிய பொருட்களாகவும் அவற்றுக்கான விலைக்குறைப்புக்காகவும் ஏற்கனவே வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இவ் அனைத்து அத்தியாவசியப் பொருட்களினதும் விலைகள் குறைவடையும்.
நாடளாவிய ரீதியில் உணவுப் பொருட்களுக்கான விலைகள் எவ்வாறு உள்ளது என்பது பற்றி சோதனை நடாத்தி தெரிந்து கொள்வதற்காக ஒரு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள நுகர்வோர் சேவை அதிகாரிகள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் என அனைவரும் பங்காற்றவுள்ளனர். அத்துடன் இத்திட்டத்தில் ஊடகவியலாளர்களின் உதவிகளையும் அதிகளவில் எதிர்பார்த்துள்ளதாக இணைப் பேச்சாளரும் அமைச்சருமான அவர் மேலும் தெரிவித்தார்.
அவ்வகையில் மக்கள் அன்றாடம் நுகரக்கூடிய அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளை ஒவ்வொரு வார இறுதியிலும் ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு அறியப்படுத்தும் புதிய முறையொன்றும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.