கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகும் இப்பரீட்சைகள், ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
இப்பரீட்சையில் தோற்றும் 240,991 பாடசாலை பரீட்சார்த்திகளுக்குமான பரீட்சை அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதே நேரம் 74,614 தனிப்பட்ட பரீட்சாத்திகளினதும் அனுமதி அட்டைகள் அவர்களது முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள் ஊடாக பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளது அனுமதி அட்டைகள் கிடைத்தவுடன் எவ்வித தாமதமுன்றி பரீட்சாத்திகளிடம் அவற்றை கையளிக்குமாறு அதிபர்களிடம் பரீட்சைகள் ஆணையாளர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட தினத்தில் விண்ணப்படிவங்களை அனுப்பி அனுமதி அட்டை கிடைக்காத தனிப்பட்ட பரீட்சாத்திகள் இருப்பின் தாம் விண்ணபித்த விண்ணப்பபடிவத்தின் பிரதி, பரீட்சைக்காக செலுத்திய ரசீதின் பிரதி, பதிவு தபால் செய்த ரசீதின் பிரதி என்பவற்றையும் இணைந்து பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை ஏற்பாடு பிரிவிடம் சமர்ப்பித்து அனுமதி அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.