எப்பொழுதும்
ஏழை மக்களுக்கு ஜாதி, பேதம் பாராது அனைத்து இன மக்களுக்கும் கைகொடுத்து உதவுகின்ற ஒரு சமூக அமைப்பான ஜம்மியத்துஷ் ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில், கடந்த வெள்ளிக்கிழமை
(01) சாய்ந்தமருது ஜாமிஉல் - இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலில்,
பள்ளிவாசல் நிர்வாகத்தினரால், ஏழை மக்களுக்கு பெருநாளுக்கான ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது ஆடைகள் பெற்றுக் கொள்வதைப் படங்களில் காணலாம்.
-ஸாஹிர்-




