Post views-

யாழ்ப்பாணத்தில் 800 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க வென வீடமைப்புக் கடன்

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச  நேற்று (2)ஆம் திகதி  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து 820 லட்சம் ருபா நிதியினை 800 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க வென  வீடமைப்புக் கடன்களை வழங்கி வைத்தாா். 

இந் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில்  சிறுவா் மகளிா் இராஜாங்க அமைச்சா்  விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் கலந்து கொண்டனா்.  வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடுமுழுவதிலும் உள்ள  மாவட்டம் தோரும் வீடுகள் அற்ற  வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தில் யாழ்ப்பாணத்திலும் 800 குடும்பங்களுக்கு  குறைந்த வட்டியில்  வீடமைப்புக் கடன் திட்டம் அமைச்சா் சஜித் பிரேமதாசவினால் வழங்கப்பட்டது.  

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 இலட்சத்து 50ஆயிரம் ருபா வழங்கப்பட்டு இந் நிதியைக் கொண்டு  தமக்கென ஒரு வீட்டை நிர்மாணித்துக் கொள்வதற்காகவே இக் கடன் வழங்கப்பட்டு வருகின்றது. 

(அஷ்ரப் ஏ சமத்)


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்