Post views-

விண்ணப்பம் கோரல்

கட்டார் நாட்டின் ஈதுல் கைரிய்யா நிறுவனத்தின் அனுசரனையுடன் சூடான் நாட்டில் புலமைப் பரிசில் வாய்ப்புடன் கலைமாணிப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பாலமுனை ஜம்இய்யதுஸ் ஸஹ்வா அல் கைரிய்யா (ஜெஸ்கா) நிறுவனத்தின் அணுசரனையில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இப்பட்டப்படிப்பு கற்கை நெறிகளில் மருத்துவம் 06, மருந்தாளர் (Phயசஅயஉளைவ) 03, பொறியியல் சார்ந்த துறைகள் 20, பல் மருத்துவம் 01, ஏனையவை (விவசாயம், கால் நடை வளர்ப்பு, கால் நடை உற்பத்தி, நிருவாகவியல், பொருளியல், கணக்கீடு, இரசாயனவியல், தாதியல், கதிரியக்கவியல் (ஓ சுயல), மொழி பெயர்ப்பியல், ஆசிரியர் பயிற்சி மற்றும் இஸ்லாமிய சட்டக்கலைகள்) 70 போன்ற துறைகளில் புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன் மேற்படி எண்ணிக்கைக்கு ஏற்ப விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன.

இக்கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிப்போர், இலங்கை வெளி விவகார அமைச்சு மற்றும் சூடான் தூதரகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட உயர்தர பெறுபேற்றுச் சான்றிதழைச் (யுஃடு சுநளரடவ) சமர்பித்தல்,  மருத்துவம் 90மூ, பொறியியல் 85மூ, ஏனையவை 75மூ ற்கு மேற்பட்ட புள்ளிகள் பெற்றிருத்தல மற்றும் மாணவர்கள் தேக ஆரோக்கியமுடையவராக இருத்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 2016ஃ2015 ஆம் ஆண்டில் வெளியான பெறுபேறுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கான விண்ணப்ப முடிவுத் தொகுதி 2016.07.01 என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தெரிவு செய்யப்படுபவர்களுக்கான கற்கைகள் 2016.09.01 முதல் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இப்பட்டப் படிப்புக்காக விண்ணப்பிக்க விரும்பும் மேற்படி தகைமைகளையுடையோர் 2016.06.28 ஆம் திகதிக்கு முன்னர் தங்களுடைய ஆவணங்களை பூர்த்தி செய்து ஜம்இய்யதுஸ் ஸஹ்வா அல் கைரிய்யா (ஜெஸ்கா), தலைமைக் காரியாலயம், கடற்கரை வீதி, பாலமுனை எனுமு; முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் மேலதிக தகவல்களுக்கு 0775026546, 0772274547 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது.

பி. முஹாஜிரீன்

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்