நெல்சிப் திட்டத்தின் கீழ் 18.57 மில்லியன் ரூபாய் செலவில் மஹிந்த ராஜ பக்ஷவின் ஆட்சிகாலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஓட்டமாவடி கொழும்புபிரதான வீதியின் அருகில் நிர்மானிக்கப்பட்ட மீன் சந்தை கட்டிடத்தொகுதி கிழக்கு மாகாணமுதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்களினால் நேற்று (22.06.2016) திறந்துவைக்கப்பட்டது.
இச்சந்தை கட்டிடத்திற்கான அடிக்கல்லினை கடந்த வருடத்திற்கு முன்பு கிராமிய பொருளாதாரஅபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி நாட்டி வைத்திருத்தார்.
இக்கட்டிட தொகுதி அமைவிடம் மற்றும் அதற்கான திட்டங்களை பிரதி அமைச்சர் அலி அவர்களே வழங்கி இருத்தார்என்றும் இச் சூழலை அழகு படுத்த வேண்டும் என்ற வகையில் நல்லாட்சியின் பிற்பாடு சமூர்த்தி வீடமைப்பு பிரதிஅமைச்சராக அமீர் அலி அவர்கள் இருக்கின்ற காலத்தில் மேலும் 25 லச்சங்களை ஓதுக்கி இதற்கானவேலைத்திட்டங்களை தொடர்த்தார்” என்ற உண்மைநேற்றையதிறப்பு விழா நிகழ்வின் போது அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் கட்சியின் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளராகவும் புதிதாக சிரிலங்காமுஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இனைத்து தமது அரசியல் பயனத்தை ஆரம்பித்த கே.பீ.எஸ்.ஹமீட் அவர்கள் பொதுமக்களுக்கும் சபையில் இருத்த முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களுக்கு,உறுப்பினர்களுக்கும்,அதிகாரிகளுக்கும் விளக்கமளிக்கும் போது குறிப்பிட்டு இருத்தார். என்பது எடுத்து காட்டாகும்.
எது எவ்வாறாயினும் தமது பிரதேச அபிவிருத்தியிலும் மாவட்டத்தின் அபிவிருத்தியிலும் நல்லாட்சியின் பிரதானபங்காளராக நிகழும் பிரதி அமைச்சர் அமீர் அலியை இத்திறப்பு விழா நிகழ்விற்கு அழைக்காது புறக்கனித்துநடாத்தியமையானதை தாம் வன்மையாக கண்டிப்பதாக கல்குடா பிரதேசத்தின் சமூக சேவகரும் கோறளைப்பற்றுமேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
மேலும் அவா் குறிப்பிடுகையில் ”இச்சந்தை கட்டிடம் அமைப்பதற்கான சகல முயற்சிகளையும் பிரதியமைச்சர் அமீர்அலி மேற்கொண்டு இருத்தார். மேலும் கடந்த காலங்களில் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லை பகுதியில் சபைஉறுப்பினர்களினால் பல்வேறு திட்டங்கள் மும்மொழியப்பட்டு சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றபட்ட வேளையில்குறிப்பாக இப்பிரதேசத்தின் மீராவோடை, மாஞ்சோலை,காவத்தமுனை போன்ற கிராமங்களின் வீதி அபிவிருத்திக்காகஇந்த நெல்சிப் திட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருத்தது.
ஆயினும் பிரதியமைச்சர் எம்மை அழைத்து இந்நிதியினை கொண்டு மேலும் சிறப்பாக இம் மீன் சந்தைகட்டிடத்தொகுதியினை சரியாக புரணப்படுத்த வேண்டும் அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு வேண்டியதுடன்பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டா்ர
.என்ன நடத்தாலும் எது நடத்தாலும் எமது மக்கள் நன்றி மறவாத மக்கள் என்பதனை எதிர்காலங்களிலும் நிறுபித்துகாட்டுவார்கள் என்பதில் ஐயம் மில்லை என குறிப்பிட்டார்.
(எம்.ரீ.எம்.பாரிஸ்) 0778327822







