Post views-

அமீர் அலியின் கோட்டைக்குள் ஹாபிஸ் நசீரினால் மீன் சந்தை திறப்புடன், ஹமீட் SLMC உடன் பகிரங்க கைகோர்ப்பு-.(வீடியோ)

ஆரம்பத்திலிருந்த கொந்திராத்துகாரர்களுடைய கட்டுமான பணிகளில் ஏற்பட்ட பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்த பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலியின் கோட்டையான ஓட்டமாவடியில் உள்ள மீன் சந்தை கட்டமானது நீதி மன்றத்திற்கும் சென்று இறுதியில் கொந்தராத்துகாரர்களிடம் ஏற்பட்ட சமரசம் காரணமாக கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமலே இருந்து வந்தது. அந்த நிலையிலே நேற்று 22.06.2016 புதன்கிழமை ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் ஷாபியினால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளூராட்சி ஆணையாளர் கே.சந்ரவேல் தலைமையில் இடம் பெற்ற இஃப்தாருடனான திறப்பு விழாவில் கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தினை தன் கையில் வைத்திருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்-ஹாபிழ் நசீர் அஹமட் பிரதம அதீதியாக கலந்து கொண்டு மக்களின் பாவனைக்காக புதிய ஓட்டமாவடி மீன் சந்தையினை திறந்து வைத்தார்.
பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் திறந்து வைக்கப்பட்ட புதிய மீன் சந்தை கட்டிடமானது கல்குடா பிரதேசத்தில் பொதுமக்களால் கூடுதலாக பேசப்படும் விடயாமாக மாறியிருகின்றமை பிரதேசத்திலே ஒரு வித்தியாசமான அரசியல் கலாச்சாரத்தினை தோற்றுவித்துள்ளா? என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. பிரதி அமைச்சர் அமீர் அலியின் கோட்டையாக கருதப்படும் ஓட்டமாவடியில் அமைய பெற்றிருக்கும் குறித்த புதிய மீன் சந்தை கட்ட திறப்பு நிகழ்விற்கு பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு அழைப்பு விடுக்கப்படாமல் முதலமைச்சர் நசீர் அஹமட்டினால் குறித்த மீன் சந்தை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டமையானது பிரதி அமைச்சர் அமீர் அலியின் ஆதரவாளர்கள் மத்தியில் பாரிய அதிருப்தியினை ஏற்படுத்திய விடயமாக மாறியுள்ளது. இருந்தும் குறித்த மீன் சந்தை கட்டிடமானது மாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டிருப்பதனால் முதலமைச்சர் கட்டத்தினை திறந்து வைத்தமையானது பொதுவான விடயமாகவும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அரசியல், அதிகார, கலாச்சார விழும்மியங்களுக்கு அமைவாகவே இடம் பெற்றுள்ளது என்பது பொதுவான விடயமாகும்.
இவ்விழாவில் இடம் பெற்ற இன்னுமொரு முக்கிய விடயமான முன்னால் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளரும் மீராவோடை ஜும்மா பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை தலைவரும் பிரதி அமைச்சர் அமீர் அலியின் அரசியல் முன்னெடுப்புக்களை தோளோடு தொள் நின்று மீராவோடை பிரதேசத்தில் முன்னெடுத்து வந்தவருமான கே.பி.எஸ்.ஹமீட் பகிரங்கமான முறையில் கல்குடா பிரதேசத்திலே வைத்து முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் முன்னிலையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டார். இச்சம்வமானது கல்குடா பிரதேசத்தில் மட்டுமல்லாமல் மாவட்டத்திலேயே முக்கியமாக பேசப்படும் அரசியல் திருப்பமாக மாறுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளதனை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன் இன்னுமொரு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர் மீரான் ஹாஜியும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீருடன் கைகோர்த்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டமையானது முக்கிய விடயமாக குறித்த நிகழ்வில் பார்க்கப்படும் விடயமாக இருக்கின்றது.
மேலும் முக்கிய விடயமாக கருதப்பட்டு குறித்த நிகழ்வில் பகிரங்கமாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்ட முன்னால் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் உரையாற்றுகையில் கட்டிடத்திற்கான அடிக்கல்லினை கடந்த வருடத்திற்கு முன்பு கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி நாட்டி வைத்ததுடன் சூழலை அழகு படுத்தும்முகமாக பிரதி அமைச்சர் சமூர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சராக இருந்த காலத்தில் மேலும் 25 இலட்சங்களை ஓதுக்கி அதற்கான வேலைத்திட்டங்களை தொடர்த்தார் என்ற உண்மையினை முதலமைச்சரினை வைத்துக்கொண்டே உரையாற்றியமையானது குறித்த மீன் சந்தை கட்டத்தினை ஓட்டமாவடி பிரதேசத்திற்கு கொண்டுவருவதற்கு பிரதி அமைச்சர் அமீர் அலியின் பங்கு இருந்துள்ளது என்பதனை எடுத்துக்காட்டியது.
ஆனால் மறுபக்கத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் எவருடைய சொந்த நிதியிலிருந்து கட்டப்படாமல் மக்களுக்காக அரச பணத்திலிருந்து கட்டப்பட்ட மீன் சந்தை கட்டடமானது தனிப்பட்ட நபருக்கு சொந்தமானதல்ல. மாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் இருந்தும் அதனை உரிய முறையில் அரசியல் காழ்புணர்ச்சி கொண்டு திறக்கப்படுவதற்கு தடை விதிக்கும் முகமாக மேல் இடங்களுக்கு பல மூறை அறிவித்தல் கொடுத்ததன் காரணமாக மக்களுக்கு இந்த மீன் சந்தை கட்டத்தினை உரிய நேரத்தில் கையளிக்க முடியாமல் செய்ததை தவிர அவர்களால் மக்களுக்கு எதனையும் சாதித்து காட்ட முடியவில்லை. யாராக இருந்தாலும் மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரத்திலும் சரி உரிமைகளிலும் சரி கைவைக்க முயலுவார்களாயில் தான் முதலமைச்சர் கதிரையில் உட்கார்ந்திருக்கும் வரைக்கும் அவர்களால் அதனை மேற்கொள்வதற்கு ஒரு பொழுதும் இடமளிக்க மாட்டேன் என தெரிவித்தார்.
குறித்த சர்ச்சைக்குறிய மீன் சந்தை கட்டிடமானது திறந்து வைக்கப்பட்ட நிழ்வும் அதனோடு இடம் பெற்ற சம்பவங்களின் காணொளியும் எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
வீடியோ சர்ச்சைக்குறிய மீன் சந்தை திறப்பு விழாவின் காணொளி:-
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்