திருகோணமலை மாவட்டத்தில் முதன் முறையாக 1981 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்ட்ட தி/ கிண். அல்-அக்ஸா கல்லூரி இரண்டு மாடி மகரூப் மண்டபம் இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகின்றது.
இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் தங்கள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை பீதியுடனும், அச்சத்துடனும் மேற்கொண்டுவருவதாக அக்கல்லூரி அபிவிருத்திக் குழு தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக அவ் அபிவிருத்திக் குழு திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அமைப்பாளருமான அப்துல்லா மகரூப்பின் மூலம் மகஜர் ஒன்று, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் இக்கட்டிடம் அப்போதைய மூதூர்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், துறைமுகங்கள், கப்பற்றுறை இராஜங்க அமைச்சராக இருந்த எம்.ஈ.எச்.மகரூப்பின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கபட்டது.
அன்றைய கால கட்டத்தில் அவரின் அழைப்பையேற்று கல்வி இளைஞர் விவகார அமைச்சராக இருந்த ரணில் விக்கிரம சிங்கவினால் 1982 டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி இக்கட்டிடம் திறந்து கோலகாலமாக வைக்கப்பட்டது.
இக்கட்டிடத்தில் எட்டு க.பொ.த உயர் தர வகுப்பறைகளும், அதிபர் காரியாலயம், பிரதி அதிபர் காரியாலயம், ஆசிரியர்கள் ஓய்வறை, விவசாய கூடம், போன்றவை காணப்படுகின்றது.
இக்கட்டிடம் ஏற்கெனவே, இடிந்து விழும் அபாய நிலையில் காணப்பட்டதாகவும், இந்தக் கட்டிடத்தை அகற்றுமாறு கோரப்பட்டதாகவும்,
இது குறித்து உரிய அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு வந்த பின்னர் இக்கட்டிடம் சில புனரமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு திருத்தம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கட்டிடம் இடிந்து விழுமானால் பாரிய உயிரிச் சேதங்கள் ஏற்படுவதற்கு காரணமாக இக்கட்;டடம் விளங்குகின்றது. வந்த பின் காப்பதை விடஇ வரும் முன் காப்பதே ஒரு அரசின் தலைமையான கடமையாகும்
எனவே, இக்கட்டடத்தை அகற்றி மீண்டும் இதில் இரண்டு அல்லது மூன்று மாடிக் கட்டடத்தை நிர்மாணித்து தருமாறும் இம் மகஜரில் கோரப்பட்டுள்ளது.




