Post views-

பிரான்ஸில் தொடரும் துயரம் : அதிவேக ரயில் தடம் புரண்டதில் 10 பேர் பலி

தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி நிலைகுலைந்துள்ள பிரான்ஸில் மீண்டும் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிகின்றன.
அதிவேக ரயில் ஒன்று தடம் புரண்டு, அதில் பயணம் செய்த 10 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்றைய தினம் பிரான்ஸின் இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸின் Strasbourg பகுதியில் TGV அதிவேக ரயிலுக்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில், அந்த ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
49 பேருடன் பயணித்த குறித்த ரயில் வேகத்தை அதிகப்படுத்தியதால் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.
மீட்புப்படையினர் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ரயில் கவிழ்ந்த பகுதி கால்வாய் என்பதால் விபத்துக்குள்ளானவர்களை தேடும் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய 10 பேர் கவலைக்கிடம் என்றும், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸில் இருந்து Strasbourg பகுதிக்கு முதன்முறையாக அதிவேக ரயில் சேவையை துவங்குவதற்கான சோதனை ஓட்டம் பிரான்ஸில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஸ)
04030201

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்