சீனாவின் கிழக்கு பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் இது வரை 16 பேர் பலியாகியுள்ளதாகவும் 21 பேரைக் காணவில்லை எனவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
சீனாவின், சீஜியாங் மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, லிடொங் கிராமத்தில், பாரிய பாறை மற்றும் சேற்றுடன் கூடிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு (13) ஏற்பட்ட இவ்விபத்தில் சுமார் 30 வீடுகள் மண்ணால் மூடப்பட்டு முற்றாக அழிவடைந்ததோடு, 16 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை 63 வயதான நபர் ஒருவர் இடுப்பு என்பு உடைந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டதோடு, தற்போது அவரது உடல்நிலை தேறிவருவதாகவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)




