பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகாபொல புலமைப் பரிசில் வழங்குவதற்கு தற்பொழுது மகாபொல புலமைப் பரிசில் நிதியத்திடம் உள்ள நிதி குறைவாகவுள்ளதனால் திறைசேரியிலிருந்து நிதி பெற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வங்கியிலிருந்து கிடைக்கும் வட்டி வீதம் குறைந்து, புலமைப் பரிசில் வழங்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மகாபொல நிதியத்திடம் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
புலமைப் பரிசில் வழங்குவதற்கு வருடத்துக்கு 1.2 பில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. இந்த நிதி மகாபொல நிதியத்திலுள்ள 9 பில்லியன் ரூபா நிதியின் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதான கட்சியொன்று அறிவித்துள்ளது.




