மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணிகள் தங்குமிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயத்திற்குள்ளாகியுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது.
நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மட்டு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப்பிரிவிற்கு குருக்கள் மடத்தில் படகுப்பாதை மேற்கொள்ளும் பயணிகள் தங்குமிடம் இடிந்து விழுந்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு பிரவேசித்த களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் கே.கோபாலரத்தினம், அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளருடன் தொடர்பு கொண்டு தற்காலிக தங்குமிடம் அமைத்து தருவதாகவும் இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய தங்குமிடத்தை அமைத்து தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.



