நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்து செய்தல் மற்றும் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தல் தொடர்பான 2 அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வசிக்கும் 2 ஆயிரம் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போதே ஜனாதிபதி இந்த தகவல்களை வெளியிட்டார்.
இதேவேளை, நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எந்தவொரு பேதங்களும் இன்றி நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செலுத்த வேண்டியது அனைத்து இலங்கையர்களினதும் கடமை என தெரிவித்தார்




