Post views-

5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு

-அரங்கம் நிருபர்: சலீம் றமீஸ்-
ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தில் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி இணைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டதால் நகரங்களில் அமைந்துள்ள பிரபல கல்லூரிகளில் இருந்து கிடைக்கும் வளங்களை இன்று நமது மாணவர்களும் பெரும் நிலைமை உருவாகியுள்ளது. என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை  தெரிவதை்துள்ளார்.

ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தில் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி இணைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டதால் நகரங்களில் அமைந்துள்ள பிரபல கல்லூரிகளில் இருந்து கிடைக்கும் வளங்களை இன்று நமது மாணவர்களும் பெரும் நிலைமை உருவாகியுள்ளது என முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். 

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.எல்.எம்.அன்வர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இதுவரை காலமும் நமது பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் பௌதீக வளங்கள் இன்றி பல சிரமங்களை எதிர்நோக்கியதுடன் நமது நாட்டில் அமைந்துள்ள பிரபல கல்லூரிகளிலுள்ள தொழிநுட்ப வசதிகளையும் ஏனைய வசதிகளையும் கருத்தில் கொண்டு எமது மாணவர்கள் உயர் கல்விக்காக நகர பகுதிகளில் அமைந்துள்ள பிரபல கல்லூரிகளை நாட வேண்டிய நிலை இருந்தன.

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரின் வளர்ச்சியில் தேசிய காங்கிரசின், தலைவரும் முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவும், நானும் இணைந்து முடிந்தளவு உதவி புரிந்துள்ளோம். மத்திய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் அமைச்சராக பதவி வகித்த சந்தர்ப்பத்திலும் கிழக்கு மாகாண சபையில் பதில் முதலமைச்சர் பதவியில்  இருந்த வேலையில் தான் கிழக்கு மாகாணத்தில் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டம் இறுதி முடிவு எடுக்கப்பட்டதுடன் இக்கல்லூரியும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது.

இதனால் இக்கல்லூரிக்கு பல கோடி ரூபா நிதியில் நவீன தொழிநுட்ப வசதிகளுடைய கட்டிடங்கள் கிடைத்துள்ளது. இன்னும் பல வளங்களும் கிடைக்கவுள்ளது.  தேசிய காங்கிரஸிடம் அரசியல் அதிகாரம் இருந்த காலமெல்லாம் நமது மக்களுக்கு முடிந்தளவு கட்சி பேதங்கள இன்றி;, இன பேதங்களின்றி பணிகள் புரிந்துள்ளோம். எங்களுக்கு அரசியல் அதிகாரம் இருந்த போது அம்பாறை மாவட்டத்தில் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடு செய்து கல்வித் துறைக்கு பணிபுரிந்துள்ளோம். பாடசாலைகள், கட்டிடங்கள்  அடிக்கல் நாட்டப்படாமலும், திறப்பு விழாக்கள் நடாத்தப்படாமலும் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் உள்ளன. கல்வித்துறைக்கு உதவி புரியும் அரசியல் வாதிகள் தேர்தலில் தனக்கு தெரிவு வாக்கு கிடைக்கும் என்ற எண்ணத்துடன் செயற்படக்கூடாது. நமது மாணவர்களின் கல்வி துறைக்கு நாம் புரியும் நல்ல பணிகளுக்கு இறைவன் நன்மை வழங்குவான் என்ற நம்பிக்கையிலேயே நாம் கல்வி துறைக்கு உதவி புரிய வேண்டும்.

நாம் கல்வித்துறையில் ஒரு போதும் அரசியல் செய்வதில்லை. ஜே.வி.பி. கட்சியை சேர்ந்த அதிபர் ஒருவர் பாடசாலைக்கு தலைமை கொடுத்து அர்ப்பணிப்புடன் செயல் பட முன்வருவார் என்றால் அவருக்கும் நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்.

இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு நாம் எல்லோரும் எப்போதும்  ஒன்றிணைந்து செயல்பட்டு வருவது நமது மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு இன்னும் உறமூட்டுவதாகவுள்ளது. நமது மாணவர்களின் ஆளுமை விருத்தியில் பங்களிப்புச் செய்து நமது மாணவர்களை சமூகத்தில் ஒரு நன்மதிப்புள்ள மாணவர்களாக உருவாக்க அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஆசான்களை மாணவர்களாகிய நீங்கள் இந்த  உலகத்தில் வாழும் வரை மறந்து விடாது அவர்களுக்கு எப்போதும் கௌரவம் கொடுக்க வேண்டும். நமக்கான சிறந்த கல்வியினை வழங்கிய நமது ஆசான்களின் பணி எப்போதும் எம் மனங்களில் நீங்காத நினைவாக உள்ளது. நாம் நமது வாழ்க்கையில் எந்த நிலையில் உயர்ந்தாலும் நமக்காக கல்வியூட்டிய ஆசான்களை கௌரவிப்பவர்களாக இருக்க வேண்டும். அட்டாளைச்சேனை தேசிய கல்லூரி நமது மண்ணிலிருந்து பல ஆளுமை உள்ளவர்களை உருவாக்கி பல் துறைகளிலும், தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் பணி புரிபவர்களாக உருவாக்கியுள்ளது.
 இக்கல்லூரியின் அதிபர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திக் குழு, அரசியல் பிரமுகர்களை இணைத்து இக்கல்லூரியின் கல்வித்துறையை முன்னெடுத்து செல்கின்றார். இதனால் இக்கல்லூரி தேசிய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும் சிறந்த பெறுபேறுகளை பெற்று நமது பிரதேசத்திற்கு பெறுமை சேர்த்துள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் அவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டவுடன் அவரை வாழ்த்தும் போது நான் சொன்னேன். இறைவன் உங்களுக்கு அமைச்சுப்பதவியை தந்துள்ளான் கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களுக்கும் நல்ல பணிகளை புரிவதுடன் நாம் பிறந்த அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு எங்களால் முடிந்தளவு உட்கட்டமைப்பு பாரிய அபிவிருத்தி பணிகள் செய்யப்பட்டுள்ளது. அப்பணிகளை தொடர் பணிகளாக செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். எங்களின் ஒத்துழைப்பு எப்போதும் இந்த விடயத்தில் கிடைக்கும் எனவும் கூறியுள்ளேன்.நமது மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்தும் போது எங்களின் ஆதரவுகளை வழங்குவோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் நடைபெற்ற பாடசாலை கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்வுகளால் நாம் எல்லோரும் வெட்கப்பட வேண்டியுள்ளதுடன், கிழக்கு மாகாண சபையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயற்பாடுகளுக்கும் அவமானம் ஏற்பட்டுள்ளது. நமது நாட்டில் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் இன்னும் 18 மாதங்களே உள்ளன. இதற்குள் அரசியல் அதிகாரங்களை பாவித்து முடிந்தளவு நல்ல பணிகளை புரியுங்கள். எங்களால் முடிந்தளவு அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

நமது நாட்டின் ஜனநாகய முறைப்படி அரசியல் துறையில் வெற்றி பெருபவர்கள் தோல்வி அடைவதும், தோல்வியடைபவர்கள் வெற்றி பெறுவதும் வரலாற்று நிகழ்வாக நடைபெற்று வருவதுடன் அரசியல் மாற்றங்களும் இடம் பெறுவது வழக்கமாகும். அரசியல் அதிகாரங்கள் இறைவன் நாடுபவர்களுக்கே வழங்குவான். யாருக்கு அரசியல் அதிகாரம் வழங்க வேண்டும் என்பதனையும், யாரிடமிருந்து அரசியல் அதிகாரத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பது இறைவன் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. நமக்கு கிடைக்கும் அரசியல் அதிகாரத்தை உச்சமாக பயன்படுத்தி நமது மக்களின் நன்மைக்காக தியாக மனப்பாங்குடன் செயல்படும் போது எமக்கு மனத்திருப்தியும் ஏற்படும்.

இந்த நிகழ்வில்,இக் கல்லூரிக்கான பேண்ட் உபகரணங்கள், சீருடை, கனணி என்பன கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டு கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசீம் உட்பட முக்கியஸ்தர்களும் கல்வி உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.





  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்